“ஆத்ம ஞான யோகாச்சாரியார்”

ஸ்ரீ வியாசானந்த மகரிஷி

அவர்கள் ஒரு தலைசிறந்த ஆன்மீக குரு.
நூலாசிரியர் மற்றும் சிகிச்சையாளர்.

“தோடுடைய செவியன்” என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தை பாடிய “திருஞான சம்பந்தர்” அவதரித்த சீர்காழி எனும் திருத்தலத்தில் பிறந்த மஹா ஆத்மாவே “ஸ்ரீ வியாசானந்த மகரிஷி” ஆவார்.

மிக இளம் வயதிலேயே திருஞான சம்பந்தர் சன்னதியிலேயே “ஆத்ம ஞானம்” பெற்று “தான் ஆத்மா” என்பதை பரிபூரணமாக உணர்ந்தவர்.

தனக்கு இறை ஞானத்தால் கிடைக்கப்பெற்ற புனிதமான கல்வி ஞானங்களையும், தன் அக உலக ஆன்மிக குருமார்களால் சூட்சுமமாக உபதேசிக்கப்பட்ட “ஆத்ம ஞானத்தையும், உயர்நிலை யோக முறைகளையும்” குருமார்களின் ஆசிர்வாதத்தோடு அனைவருக்கும் கற்பித்து வருகின்றார்.

ஆத்மா, பரமாத்மா, முக்தி என்கிற மாபெரும் வார்த்தைகளின் இரகசியங்கள் குறித்து உலகெங்கிலும் தேடும் இலட்சக்கணக்கானவர்களின் ஆன்மிக தாகத்தைத் தணிக்கும் இவருடைய பாடத்திட்டங்கள் நவீன யுகத்தின் உபநிஷதமாக மற்றும் வேத நூலாகப் போற்றப்படுகிறது.

குரு மகரிஷி அவர்கள் 10க்கும் மேற்பட்ட உயர்நிலை தியான முறைகளை கற்பித்து வருகிறார்கள். மேலும் 100க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்கள்.

ஆத்ம ஞானத்தை மட்டுமல்லாமல் தெய்வீக ஆத்ம சிகிச்சை, காரிய சித்தி மற்றும் உளவியல் பாதுகப்பு என 15க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆன்மிகம், மருத்துவம் மற்றும் உளவியல் சார்ந்த வகுப்புகளைத் தமிழகம் மற்றும் பல மேலை நாடுகளிலும் நடத்தி வருகின்றார்கள்.

யோக வாழ்வியல் வாழ்க்கையில் குருவின் பங்கு, தன் மாணவர்களை உடல், மன ஆரோக்கியத்துடனும், மனநிறைவுடனும் வாழ வைத்து, வாழ்வின் அடுத்த பரிமாணங்களை நோக்கி பாதுகாப்பாக அழைத்துச் செல்வதே ஆகும். இந்த அற்புதமான பணியை உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு செய்து வருகிறார் குரு மகரிஷி அவர்கள்.

குரு மகரிஷி அவர்கள் தனக்கு கிடைக்கப்பெற்ற ஆத்ம ஞானத்தை மட்டுமல்ல, கடந்த பல ஆண்டுகளாக தவமாக செய்து வரும் மஹா நிர்விகல்ப ஆத்ம யோக தியானங்களினால் கிடைக்கப்பெற்ற தெய்வீக சக்தியை மாணவர்களுக்கு வழங்கி, அவர்கள் இன்று அனுபவிக்கும் துயரம், வறுமை, ஏழ்மை, ஆரோக்கிய குறைவு, மன பிரச்சனைகள் ஆகியவற்றை தகர்த்தெரிந்து ஆரோக்கியத்துடன், செல்வச் செழிப்புடன், நிம்மதியுடன் மற்றும் சகல பாக்கியங்களுடன் கூடிய தெய்வீக வாழ்க்கையை உயிர்ப்புடன் வாழ அருள்புரிந்து வருகிறார்கள்.

ஆத்மாவை உணர வைத்து, புனிதமாக்கி, இவ் உலகில் யோகியாகவே வாழ்ந்து, இறுதியில் இறைவனுடன் ஒன்றற இணையும் நிலையை அடைய உதவும் மஹா யோக முறைகளை விஞ்ஞான ரீதியாக, ஒரு நெறிமுறையுடன் கற்பித்து, நம்மை உயர் உணர்வு நிலையில் திளைக்க வைக்கவும், மிக எளிதாக, விரைவாக மற்றும் பாதுகாப்பாக தெய்வீகப் பாதையில் நம்மை அழைத்துச் செல்லவும் அவதரித்த மஹா ஆத்மாவே ஸ்ரீ வியாசானந்த மகரிஷி ஆவார்கள்.

© Copyright 2019. Vyasa. All rights reserved

Design & Development by Passinovat