“ஆத்ம ஞான யோகாச்சாரியார்”

ஸ்ரீ வியாசானந்த மகரிஷி

அவர்களின்

தெய்வீக ஆத்ம சிகிச்சை

உடல், மன ஆரோக்கியம் மற்றும் பொருளாதார
மேம்பாட்டிற்காக மருந்தில்லாத மருத்துவத் துறையில்
புனிதமான பயிற்சி வகுப்பை ஆத்ம ஞான வித்யாலயம்
கற்பித்து வருகின்றது.

தெய்வீக ஆத்ம சிகிச்சை :

உடலைத் தொடாமல், மருந்து இல்லாமல், இயற்கை உயிர்ச் சக்திகளையும், எண்ண சக்தியையும், தெய்வீக சக்தியையும் பயன்படுத்தி ஆத்மாவை / ஆத்ம சக்தியை தூய்மையாக்கி - உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தொன்மையான ஆன்மிக கலையின் விஞ்ஞானப் பூர்வமான சிகிச்சை முறையே “தெய்வீக ஆத்ம சிகிச்சை” ஆகும்.

மருந்தில்லாத மருத்துவ துறையில் பலரும் சேவையாற்ற வேண்டும், குறிப்பாக இளைஞர்கள், யுவதிகள் அதிகமாக இதில் பங்காற்ற வேண்டும் என்பதற்காகவும், மாற்று முறை மருத்துவர்கள் தாங்கள் அளித்து வரும் சிகிச்சை முறையுடன், ஆன்மிக விஞ்ஞான சிகிச்சை முறையையும் இணைத்து உடல், மன பிரச்சனைகளால் அவதியுறும் நோயாளிகளை முழுமையாக குணமாக்கி அவர்களை ஆரோக்கியமாகவும், நிம்மதியாகவும், ஆனந்தமாகவும் வாழவைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே “தெய்வீக ஆத்ம சிகிச்சை” என்ற புனிதமான தெய்வீகக் கலையை ஸ்ரீ வியாசானந்த மகரிஷி அவர்கள் கற்பிக்கின்றார்கள்.

ஸ்ரீ வியாசனந்த மகரிஷி அவர்களால் கற்பிக்கப்படும் இந்த சிகிச்சை முறைகளின் சிறப்புகள் :

 • இயற்கை, எண்ணம் மற்றும் தெய்வீக சக்திகளை அடிப்படையாகக் கொண்ட சிகிச்சை என்பதால் பக்க விளைவுகள் என்பதே இல்லை.
 • நமக்கு நாமே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம், மற்றவர்களுக்கும் நாம் சிகிச்சை அளிக்கலாம்.
 • உடலைத் தொடாமல் செய்யக்கூடியதே இந்த சிகிச்சை.
 • குடும்பத்தில் மருத்துவ செலவுகள் இதனால் குறையும்.
 • நோயின் அறிகுறியை மட்டுமல்ல, நோயின் மூலக் காரணத்தையும் இதன் மூலம் நிவர்த்தி செய்யலாம்.
 • இதுவரை பல மருந்துகளாலும், மருத்துவ முறைகளாலும் குணமாகாத அனைத்து நாட்பட்ட உடல், மனம் மற்றும் உளவியல் சார்ந்த நோய்களுக்கும் விரைவான சிகிச்சையுடன் முழுமையான தீர்வு கிட்டும்.
 • எந்த மருத்துவ துறையில் உள்ளீர்களோ அம்மருத்துவ துறையோடும் இந்த சிகிச்சையை இணைத்து கொடுக்கலாம். அவ்வாறு சிகிச்சை கொடுக்கும் போது நோயாளி மிக விரைவாக குணமடைவார்.
 • உடலில் சுற்றுப்பெறும் பல்வேறு விதமான சக்திகளைப் பற்றியும், அவற்றை மேம்படுத்துவதைப் பற்றியும் முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.
 • மருந்தில்லாமல், உடலைத் தொடாமல் சிகிச்சை அளிக்கும் நுட்பங்களை யாவரும் முழுமையாக கற்றுக் கொள்ளலாம்.
 • முக்கியமாக இந்த சிகிச்சை முறையை கற்றுக் கொள்வதன் மூலம் மருந்தில்லாத மருத்துவதுறை தொடர்பான ஆழமான கல்வி ஞானத்தையும், மாற்று மருத்துவ துறை மருத்துவர்கள் தங்கள் சிகிச்சை அளிக்கும் திறனையும் வெகுவாக மேம்படுத்தி கொள்ளலாம்.
 • உடல் சார்ந்த அனைத்து நோய்களுக்கும் இந்த சிகிச்சையினால் நிரந்தர தீர்வினை அளிக்க முடியும்.
 • மனம் சார்ந்த பிரச்சனைகள் தான் உடல் பாதிப்புக்கு மூலக்காரணம் (Psychosomatic Disorder). ஆதலால் நோயின் மூலக்காரணமான மனம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் முழுமையாக குணமாக்கி விட முடியும்.
 • அதேபோல உளவியல் தாக்குதலால் (கண் திருஷ்டி, தீய சக்திகளால் பாதிப்பு, தீய எண்ண தாக்குதல்) ஏற்படும் உடல், மனம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் முழுமையாக குணமாக்கி விட முடியும்.
 • உடலின் செல் அணுக்களை, உறுப்புக்களை புத்துயிர் ஊட்ட (Regeneration) இந்த சிகிச்சையால் நிச்சயம் முடியும். குறிப்பாக கணையம் (Pancreas) செல்களை புத்துயிரூட்டி நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்க முடியும்.
 • இந்த புனிதமான சிகிச்சை முறையானது நோயின் அறிகுறியை விட, அதன் மூலக்காரணத்தை முழுமையாக சீர் செய்து உடல் உறுப்புக்களை இயற்கையான இயக்க நிலையில் இயங்க வைத்து உடல் - மன ஆரோக்கியத்துடனும், நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வழிவகைகள் செய்கின்றது.

இதுவரை உலகில் உள்ள எந்த ஆசிரியராலும் வெளிப்படுத்தப்படாத
பிரமிக்க வைக்கும் பல அரிய மருத்துவ உண்மைகள்
இந்த பயிற்சி வகுப்பில் ஸ்ரீ வியாசானந்த மகரிஷி அவர்களால்
உங்களுக்கு கற்பிக்கப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் யார் கலந்து கொள்ளலாம்?

ஆத்மாவை தூய்மையாக்குதல் பயிற்சியை முடித்தவர்கள் அனைவரும் இப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

குறிப்பு :

 • இப் பயிற்சியை முடிப்பவர்களுக்கு ஆத்ம ஞான வித்யாலத்தின் சார்பாக, ஆத்ம ஞான தியான மையம் மற்றும் தெய்வீக ஆத்ம சிகிச்சை மையம் (AATHMA GNANA MEDITATION CENTER AND DIVINE SOUL HEALING CENTER) தொடங்க அனுமதி வழங்கப்படும்.
 • உடல், மன நோயால் பாதிக்கப்படுவர்களுக்கும், சமூகத்திற்கும் ஆன்மிக சேவையாற்றுவதற்கான அரிய வாய்ப்பை குரு மகரிஷி அவர்கள் இப்பயிற்சியின் மூலமாக நமக்கு ஏற்படுத்தி தந்துள்ளார்கள்.
 • இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் பக்க விளைவுகள் இல்லாத மருத்துவ முறைகளை நோக்கி பயணம் செய்யத் தொடங்கி விட்டார்கள். ஆதலால் மருந்தில்லாமல் அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுக்கு இன்று மிகப் பிரகாசமான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்பயிற்சியை திறம்பட நீங்கள் முடித்து விட்டால் மிகச் சிறந்த குணமளிப்பவராக உங்களால் திகழ முடியும்.

© Copyright 2019. Vyasa. All rights reserved

Design & Development by Passinovat