ஆத்ம ஞானம் என்றால் என்ன?

 • ஆத்ம ஞானம் / தத்துவ ஞானம் / ப்ரஹம ஞானம் என்பது.. “என்னைப் பற்றின உண்மைகளை அறிந்து” கொள்வது ஆகும் (ஞானம் என்றால் உணர்தல் என்று பொருள், ஆத்ம ஞானம் என்றால் ஆத்மாவை உணர்தல் என்று பொருள்).
 • “என்னைப் பற்றின உண்மையை” அறிந்துக் கொள்வது என்பது.. நான் உடல் அல்ல, நான் மனம் அல்ல, நான் எண்ணமும் அல்ல, நான் உணர்வும் அல்ல, “நான் ஆத்மா” என்ற உண்மையை அறிந்து, உணர்ந்து கொண்டு அதன்படி இவ்வுலக வாழ்க்கையை தெய்வீகத் தன்மையுடன், தெய்வீக வாழ்க்கையாக வாழ்வது ஆகும்.

நோக்கம் :

நமக்குள் இருந்து, நம்மை இயக்கி, வழிநடத்தும் உணர்வும், ஞானமும் உள்ள இறை சக்தியின் அம்சமான “ஆத்மாவை உணரவைத்து”, யோக விஞ்ஞானத்தின் மூலமும், வாழ்வியல் நெறிமுறைகளின் மூலமும் “ஆத்மாவை தூய்மையாக்கி, புனிதமாக்கி” தெய்வீகத் தன்மையுடன், தெய்வீக வாழ்க்கையை வாழ வைப்பதே (வாழும் போதே பரிபூரண முக்தி நிலையை அடையச் செய்வதே) ஆத்ம ஞானம்- வாழ்வியல் பயிற்சியின் நோக்கமாகும்.

இப்பயிற்சியை பயிற்சி செய்யும் ஒவ்வொரு சாதகரையும்...

 • தெய்வீக குணநலன்களுடனும்,
 • உடல், மன ஆரோக்கியத்துடனும்,
 • நிம்மதியாகவும்,
 • திருப்தியாகவும்,
 • பேரானந்தமாகவும்,
 • சகலபாக்கியத்துடனும், பொருளாதார வசதியுடனும்,
 • இணக்கமான மனித உறவுகளுடனும்,
 • இடைவெளி இல்லாத மனநிறைவு உணர்வுடனும், வாழும் ஒவ்வொரு நொடியையும் உயிர்ப்புடன் அனுபவித்து வாழ வைப்பதே ஆத்ம ஞானம் - வாழ்வியல் பயிற்சியின் நோக்கமாகும்.

ஆத்ம ஞானம் பெற்று, தெய்வீகத்தன்மையுடன், தெய்வீக வாழ்க்கையை வாழ்வதால்.. (முக்தி அடைவதால்)

 • ஞானம் பெற்று, பரிபூரண முக்தி நிலையை அனுபவிக்க தொடங்கிவிட்டாலே இந்த உலகில் நீங்கள் விரும்பும் அனைத்து தெய்வீக ஞானங்களையும், தெய்வீக ஆற்றலையும் வசப்படுத்தி விட முடியும். மேலும் தெய்வீக அன்பால் நிரப்பப்பட்டு அன்பின் வடிவாகவே வாழ முடியும்.
 • உடல், மன ஆரோக்கியமாக, நிம்மதியாக, திருப்தியாக, மகிழ்ச்சியாக, செல்வச்செழிப்பாக மற்றும் சகலபாக்கியங்களுடன் கூடிய வாழ்க்கையை உயிர்ப்புடன் அனுபவித்து வாழ முடியும்.
 • இவ்வுலகில் பிரச்சனைகளே இருக்காது, உறவுகளில் விரிசல்கள், மனித மனங்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் எல்லாம் விலகிவிடும்.
 • யாரும் யாரையும் ஏமாற்றமாட்டார்கள். உலகம் முழுவதும் மகாத்மாக்களால் சூழப்பட்டிருக்கும்.
 • நான், என்னுடையது என்ற எண்ணம் போய், நாம், நமது என்ற பொதுவுடைமை நிலவும்.
 • எல்லை தாண்டிய பயங்கரவாதம், தீவிரவாதம், தண்ணீர் பிரச்சனை, மொழிப்பிரச்சனை, எல்லைப் பிரச்சனை, பொருளாதாரப் பிரச்சனை எல்லாம் மாயமாகிவிடும்.
 • காமம், வன்முறை, மதச்சண்டை, ஜாதிச்சண்டை, பாலியல் வன்கொடுமை எல்லாம் காணாமல் கரைந்து போய்விடும்.
 • இவ்வுலகில் அன்பையும், பேரமைதியையும், ஆனந்தத்தையும், மனித நேயத்தையும், ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் மற்றும் சகோதரத்துவைத்தையும் அனுபவிக்க முடியும்.

இவ்வாறு பரிபூரண முக்தி நிலையை அனுபவித்து வாழ்ந்தால் வாழ்க்கைக்கு பிறகு சித்தர்களும், யோகிகளும் கூறும் இறை ஒளியுடன் ஒன்றற கலந்து விடும் வாழ்க்கைக்கு பிறகான முக்தி நம்மை தேடி வரும். நாம் அதற்காக தனியாக பயணம் செய்ய வேண்டியதில்லை.

பலரும் வாழ்க்கைக்கு பிறகான முக்தி நிலையே உயர்வானது என்றும் அதை அடைய பலவாறும் கடுமையாகவும் பயிற்சி செய்கிறார்கள், சன்னியாசி ஆகி விடுகிறார்கள். காடு, மலை என சுற்றுகிறார்கள். குடும்பத்தையும், இவ்வுலக அனுபவங்களையும் துறக்கிறார்கள்.

இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது தான் “ஆத்ம ஞானம்” பயிற்சி வகுப்பு ஆகும். இது குடும்ப வாழ்க்கையில் இருந்து கொண்டே / இவ் உலகில் இயல்பாக வாழ்ந்து கொண்டே முக்தி அடைவதை கற்பிக்கிறது. மேலும் இதை சரியாக அனுபவித்தால் இயற்கையாகவே வாழ்க்கைக்கு பிறகான முக்தி நிலை கைகூடி விடும் என்பதையும் எடுத்துரைக்கிறது.

ஆத்ம ஞான பாடத்திட்டத்தின் சிறப்புகள் :

இப்பயிற்சி வகுப்பில் பல்வேறு மேன்மையான தெய்வீக பாடத்திட்டங்கள், கல்வி ஞானங்கள் கற்பிக்கப்படுகிறது.

ஆத்மாவை தூய்மைப்படுத்த, விழிப்படையச் செய்ய, புனிதப்படுத்த..

 • சித்த - நிர்விகல்ப தியானம்
 • ஆத்ம கிரியா தியானம்
 • ஓம் தியானம்
 • தெய்வீக குண்டலினி தியானம்
 • தெய்வீக பொன்னிற சக்தியை உருவாக்கும் தியானம் (3 நிலைகள்)
 • மஹா நிர்விகல்ப ஆத்ம யோக தியானம்
 • குருவிடம் முழுமையாக சரணடைந்து, குரு சக்தியை பெற உதவும் “மஹா யோக குரு தியானம்”

என பல்வேறு உயர்நிலை தியானங்கள் கற்பிக்கப்படுகிறது.

முக்கியமான யோகமுறைகள் :-

 • ஹத யோகா
 • இராஹ யோகா
 • கர்ம யோகா
 • பக்தி யோகா
 • ஞான யோகா
 • மந்திர யோகா / ஜப யோகா
 • தெய்விக குண்டலினி யோகா
 • நிர்விகல்ப ஆத்ம யோகா
 • குரு யோகா

மேன்மையான தெய்வீக கல்வி ஞானங்களையும், 9 யோக முறைகளை உள்ளடக்கிய “பரிபூரண யோக விஞ்ஞானத்தை” அடிப்படையாக கொண்ட பாடத்திட்டங்கள், செயல்முறை பயிற்சியுடன் மிக விளக்கமாக கற்பிக்கப்படுகிறது.

ஆத்ம ஞானம் பாடத்திட்டத்தின் 3 நிலைகள் :

ஆத்ம ஞானம் மூன்று நிலையாக பிரிக்கப்பட்டு கற்பிக்கப்படுகிறது.

நிலை 1 : ஆத்மாவை உணர்தல்

நிலை 2 : ஆத்மாவை தூய்மையாக்குதல்

நிலை 3 : ஆத்மாவை புனிதமாக்குதல் மற்றும் அதன் குறிக்கோளை நிறைவேற்றுதல்

“ஆத்ம ஞானம்” இறையருளாள் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகும். இது பல நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. காரணம் ஒவ்வொரு நிலையையும் புரிந்து கொண்டு, பயிற்சி செய்துவிட்டு அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு பிரிக்கப்பட்டு கற்பிக்கப்படுகிறது.

“ஆத்ம ஞானம்” பாடத்திட்டம் என்பது சாதரணமாக பல ஆன்மிக பயிற்சி மையங்களால் நடத்தப்படும் யோகா வகுப்பு அல்ல.

இவ்வகுப்பு.. இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவரையும் புனிதமான ஆத்மாவாக, யோகியாக வாழச்செய்யும் மிக உயர்ந்த தியான நுட்பங்களையும், அளப்பரிய தெய்வீக கல்வி ஞானங்களையும் உள்ளடக்கிய வாழ்வியல் வகுப்பாகும்.

ஆத்மா என ஒன்று உள்ளது என நம்புவர்களும், ஆத்மாவைப் புனிதப்படுத்த விரும்புவர்களும், “இறை ஒளியுடன் இணைந்து வாழ வேண்டும்” என நினைப்பவர்களும் கற்றுக்கொள்ள வேண்டிய பயிற்சி வகுப்பு “ஆத்ம ஞானம்”
ஆகும்.

மஹானாக அவதரித்தாலும்,
மனிதனாகப் பிறந்தாலும்
கற்று உணர்ந்து,
பயிற்சி செய்ய வேண்டிய பாடமுறை
“ஆத்ம ஞானம்” ஆகும்.

உலகில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய
ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது
“ஆத்ம ஞானம்” மட்டுமே!

© Copyright 2019. Vyasa. All rights reserved

Design & Development by Passinovat