வியாசா - ஆத்ம ஞான வித்யாலயம், கிளாசிக்கல் ஹீலிங் ரிசர்ச் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையின் ஓர் அங்கம் ஆகும். இந்த அறக்கட்டளை 2001ம் ஆண்டு இந்திய அரசில் பதிவு செய்யப்பட்ட ஓர் அறக்கட்டளை (அரசு பதிவு எண் 30/2001) ஆகும்.

இவ்வுலகில் பிறந்த ஓவ்வொரு மனிதரும் தெய்வீக நற்குணங்களுடன், ஆரோக்கியமாக, ஆனந்தமாக, திருப்தியாக, நிம்மதியாக, செல்வச்செழிப்பாக மற்றும் இடைவெளி இல்லாத மனநிறைவு உணர்வுடன் கூடிய தெய்வீக வாழ்க்கையை உயிர்ப்புடன் அனுபவித்து வாழ வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளை அடிப்படையாக கொண்டே இந்த அறக்கட்டளை செயல்படுகிறது.

இக்குறிக்கோளை நிறைவேற்றவும், மக்கள் அனைவரும் “வாழ்வியல் நெறி முறைகளை” பின்பற்றி வாழ வேண்டும் என்பதற்காகவே ஆன்மிகம் மற்றும் வாழ்வியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகளையும், பயிலரங்குகளையும், இலவச சிகிச்சை முகாம்களையும், நீரிழிவு நோய் விழிப்புணர்வு முகாம்களையும் மற்றும் ஏனைய சமூக பணிகளையும் மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது.

அதுமட்டும் இன்றி பள்ளி மாணவ - மாணவிகள், இளம் வயதினர்கள் பயன் பெறும் வகையில் அவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், இச்சமூகத்தில் ஒழுக்கத்துடன் வாழவும், அவர்களுக்கு இயமம், நியமம் போன்ற நற்குணங்களை மேம்படுத்தும் பயிற்சிகள் இந்த அறக்கட்டளையால் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

“ஆத்ம ஞான யோகாச்சாரியார்” ஸ்ரீ வியாசானந்த மகரிஷி அவர்கள் இந்த அறக்கட்டளையின் நிறுவன தலைவர் ஆவார். கடந்த 25 ஆண்டுகளாக இம்மனித குலத்திற்கு இறையருளாலும், அக உலக குருமார்களின் அருளாலும் சேவையாற்றி வருகிறார்.

© Copyright 2019. Vyasa. All rights reserved

Design & Development by Passinovat